மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு... நாளை முதல் இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் விண்ணப்பங்கள்!

 
இளம் விஞ்ஞானிகள்


 
பள்ளி மாணவர்கள் படித்து முடித்த பிறகு என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைக் கூறுவர். இந்த கேள்விக்கு   அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆர்வத்தை பள்ளி மாணவர்களிடையே கொண்டுவரவும் அதை நோக்கி அவர்களின் இலக்கை ஊக்குவிக்கவும்  அரசு பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  அதன் ஒருபகுதியாகத் தான் இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தில்  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் நுட்பங்கள் குறித்து பள்ளி செல்லும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.   பள்ளி மாணவர்களின் மனதில்   ஆர்வத்தை ஊக்குவிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்  இஸ்ரோ 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்காக "இளம் விஞ்ஞானிகள் திட்டம்"   என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இளம் விஞ்ஞானிகள்


இத்திட்டத்தின் மூலம்  கடந்த 3 ஆண்டுகளில்  111, 153 மற்றும் 337 மாணவர்கல்  கலந்து கொண்டனர்.  இதில் பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விண்வெளி அறிவியல் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில்   2023ல் இந்தியா  முழுவதிலும் இருந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்தனர்.   விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் குறித்த அடிப்படை அறிவை, விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகளுக்கு ஏற்ப இளம் மாணவர்களுக்கு வழங்குவதே இதன்  முக்கிய நோக்கமாகும்.  இளம் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதற்காக இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டது.  மாணவர்களின் இருப்பிடங்களின் அடிப்படையில் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டன. அதன்படி   இந்த ஆண்டுக்கான , இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர நாளை பிப்ரவரி 20 முதல்  மார்ச் 20ம் தேதி வரை https://jigyasa.iirs.gov.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இளம் விஞ்ஞானிகள்
இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 2 வார கால வகுப்பறை பயிற்சி, பரிசோதனைகளின் செயல்முறை விளக்கம், போட்டிகள், ரோபோடிக் கிட், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மாதிரி ராக்கெட் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு ஆகியவைகளில் கலந்து கொள்ள  வாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்தில் வகுப்பறை விரிவுரைகள், ரோபாட்டிக்ஸ் சவால்கள், ராக்கெட், செயற்கைகோள்களின் வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதி வருகைகள் மற்றும் விண்வெளி விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் ஆகியவையும் அடங்கும். விண்வெளி அறிவியல் மற்றும் வானியல் பற்றி தெரிந்துகொள்ளவும்  ஆர்வமாக இருக்கும் . பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள இஸ்ரோ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சதிர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web