ஜெஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு... நவ.27 கடைசி தேதி.. என்னென்ன ஆவணங்கள் தேவை?!
அடுத்த கல்வியாண்டிற்கான (2026–27) ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட உயர்நிலை தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் நுழைவுத் தேர்வுக்கு நவம்பர் 27க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான ஜெஇஇ மெயின் தாள்–1 தேர்வும், பி.ஆர்க். மற்றும் பி.பிளானிங் படிப்புகளுக்கான தாள்–2 தேர்வும் தேசிய தேர்வு முகமை வழியாக ஒவ்வொரு ஆண்டும் இரு கட்டங்களாக (ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில்) நடத்தப்படும்.

அந்த வகையில், 2026–27 கல்வியாண்டிற்கான முதல் கட்ட ஜெஇஇ மெயின் தேர்வு 2026 ஜனவரி 21 முதல் 30 வரை நடைபெறும். தேர்வுக்கான விண்ணப்பங்கள் http://www.nta.ac.in என்ற இணையதளம் வழியாக நவம்பர் 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் தேர்வு மைய விவரங்கள் ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் பிப்ரவரி 12ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. அதேபோல், ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட ஜெஇஇ மெயின் தேர்வுக்கான தனி அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர, ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மேலும், ஐஐடி-யில் சேர விரும்பும் மாணவர்கள் ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்விலும் தகுதி பெற வேண்டும். ஜெஇஇ மெயின் தேர்வில் குறிப்பிட்ட தரவரிசை (Rank) பெறுபவர்களுக்கு மட்டுமே ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் எழுத அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
