5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 1195 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனம்!
இந்தியாவில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதில் எம்.பிக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, மத்திய அமைச்சர்கள் எழுத்துப்பூர்வ பதில்களை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், இட ஒதுக்கீட்டுப் பிரிவு அடிப்படையில் இதுவரை எத்தனை பேர் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய மணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் “ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எஃப்.எஸ்., ஆட்சேர்ப்பு சம்பந்தப்பட்ட விதிகளின்படியே மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) மூலம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போதுள்ள அறிவுறுத்தல்களின் படி இந்த பணிகளில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முறையே 15 சதவீதம், 7.5 சதவீதம் மற்றும் 27 சதவீதம் விகிதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் இடஒதுக்கீட்டு பிரிவில் 1,195 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., உயர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்” என பதில் அளித்துள்ளார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
