நீதிபதியான கூலித்தொழிலாளியின் மகள்.. குடிசை வீட்டில் இருந்தே சாதித்த இளம்பெண்!

 
சுதா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நாலாநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கணேசன் - சந்திரா தம்பதியர். கூலித் தொழிலாளியான கணேசனின் மூன்றாவது மகள் சுதா, ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ளார். தொடர்ந்து, திருவாரூர்  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

நீதிபதியாக தேர்வான சுதாவின் பெற்றோர்

அதன்பின், திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து, திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி வக்கீல் சங்கத்தினர், அவரது படிப்பு மற்றும் கல்வி நிலையை அறிந்து, நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும்படி கூறியுள்ளனர்.

அதன்படி தமிழக அரசு நடத்திய நீதிபதி தேர்வுக்கான முதற்கட்ட தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்வுகளில் திருவாரூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஒரே நீதிபதி சுதா மட்டுமே.

நீதிபதியாக தேர்வான சுதா

குடிசையில் வாழ்ந்தாலும், தனது கடின உழைப்பால் அரசு கல்வி நிறுவனங்களில் படித்து நீதிபதி பதவி வரை உயர்ந்த சுதாவை, சொந்த ஊர் மக்களே பிளக்ஸ் பேனர்கள் வைத்து பாராட்டினர். அதேபோல், அவர் இந்த நிலைக்கு வரக் காரணமான திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர்கள் சங்கமும், நீதிபதிகளும் சுதாவை வெகுவாகப் பாராட்டினர். கூலித்தொழிலாளி மகள் நீதிபதியாக பதவியேற்றது அனைவரையும் ஆச்சர்யபட வைத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web