கதாநாயகனாக மட்டுமல்ல காமெடியிலும் கலக்குவேன்... மனம் திறந்த அப்புக்குட்டி... !

 
வாழ்க விவசாயி

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமான அப்புக்குட்டி, அழகர்சாமியின் குதிரை, வெந்து தணிந்தது காடு, என தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். பால்டிப்போ கதிரேசன் தயாரிப்பில், பொன்னி மோகன் இயக்கியுள்ள வாழ்க விவசாயி படத்தில், கதையின் நாயகனாக , விவசாயியாக வாழ்ந்து, நடித்துள்ள அப்புக்குட்டிக்கு மீண்டும் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அப்புக்குட்டி ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார்.
வாழ்க விவசாயி
ராஜூ சந்திரா இயக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் படத்தில் கதையின் நாயகனாக அப்புக்குட்டி மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார். கதையின் நாயகனாக நடிப்பது தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறும் அப்புக்குட்டி, ரஜினி, விஜய் படங்களில் காமெடி செய்யவும் விருப்பம் தெரிவிக்கிறார் !

ராஜூ சந்திரா இயக்கத்தில்   கதாநாயகனாக நடித்திருக்கும் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ .  நல்ல விசயங்களை சொன்னாலே அதை ஏதோ கலைப்படம் என ரசிகர்கள்  நினைத்துவிடுகிறார்கள். ஆனால் இந்த திரைப்படம் ரசிக்க கூடிய விதத்தில் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக இருக்கும்.

அப்புக்குட்டி

கதாநாயகனாக மட்டுமல்ல தொடர்ந்து காமெடியனாகவும் நடிப்பேன். அத்துடன்  குணச்சித்திரம், வில்லன் என்று அனைத்து கதாபாத்திரத்திலும் நடிக்கத்  தயாராகவே இருக்கிறேன்.  
சினிமாவில் யாரும் எனக்கு போட்டியில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்வேன். அது மட்டுமே என் நோக்கம்.  என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர்களுக்காக கடுமையாக உழைக்க வேண்டும், ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும்.  இதை சரியாக செய்தால் போதும் என் இடம் எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும் எனக் கூறியுள்ளார். 
 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web