ஜிவி பிரகாஷுக்கு பியானோ பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்!

 
ஜி.வி.பிரகாஷ்
 


தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்  ஜி.வி.பிரகாஷ். இவர் 2006ல் வெளியான ‘வெயில்’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மதராசப்பட்டினம், ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம் உட்பட  பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.   2020ல்  வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக  ஜி.வி.பிரகாஷ் முதல் முறையாக தேசிய விருது வென்றார். அதனை தொடர்ந்து,  ‘வாத்தி’ படத்திற்காக 2வது முறையாக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஜி.வி.பிரகாஷ்  பெற்றுள்ளார். 

ஏ.ஆர்.ரஹ்மான்
இதற்கு ஜிவிபிரகாஷுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில்  இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில்  ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றையும் வழங்கினார்.  

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரகுமானின் மூத்த சகோதரி ஏ.ஆர்.ரெய்ஹானாவின் மகனான ஜி.வி.பிரகாஷ், 90-களில் ரகுமானின் இசையில் வெளியான ‘சிக்கு புக்கு ரயிலே’ உட்பட  பல ஹிட் பாடல்களில் குழந்தை பாடகராகவும் பாடியுள்ளார்.  தற்போது 2வது முறையாக தேசிய விருது வென்றிருக்கும் தனது மருமகன் ஜி.வி.பிரகாஷுக்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு அழகிய வெண்ணிற பியானோவை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், “இது எனக்கு கிடைத்த மிகச்சிறந்த பரிசு. இதை விட வேறு என்ன சிறந்த பரிசை நான் கேட்டுவிட முடியும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?