ரூ.30 லட்சம் மோசடி... ‘அறம்’ பட இயக்குநர் மீது இலங்கை தமிழ்பெண் பரபரப்பு புகார்!

 
சியாமளா

நயன்தாரா நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான அறம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோபி நயினார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குனர் கோபி நயினார் பிரபலமானார். 

தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு மனுசி என்ற படத்தை அவர் தற்போது இயக்கி வருகிறார். 
இந்த நிலையில் அவர் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை பூர்வீகமாக கொண்ட சியாமளா என்ற பெண், பிரான்ஸ் நாட்டிற்கு குடிப்பெயர்ந்து தற்போது அங்கேயே வசித்து வருகிறார். இவர் தான் இயக்குநர் கோபி நயினார் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்த பிறகு சியாமளா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தான் சிறுசிறு குறும்படங்கள் எடுத்துள்ளேன். சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக தமிழ் திரைப்படங்கள் தயாரிக்க ஆசைப்பட்டு கடந்த 2018ஆம் ஆண்டு சினிமா நட்பு வட்டாரங்கள் மூலமாக ஆக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

சியாமளா

அப்போது தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் அறம்பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகர் ஜெய்யை வைத்து `கருப்பர் நகரம்' என்ற திரைப்படத்தை தயாரித்து வருவதாகவும், அந்த படத்திற்கு இணைந்து தயாரிப்பாளராக இருக்குமாறும் தன்னிடம் கூறினார்.

இது தொடர்பாக இயக்குநர் கோபி நாயினாரை சந்தித்து பேசியபோது, விஜய் அமிர்தராஜுடன் இணைந்து படம் தயாரிக்கலாம் என வாக்குறுதி அளித்துள்ளார். இதனால் கடந்த 2018ஆம் ஆண்டு `கருப்பர் நகரம்' என்ற திரைப்படத்திற்காக மொத்தம் 30 லட்சம் ரூபாயை விஜய் அமிர்தராஜிடம் கொடுத்தேன். 

பின்னர் இத்திரைப்படத்தின் பூஜை முடிந்து மூன்று நாட்கள் ஜெய்யை வைத்து கோபி நாயினார் படப்படிப்பு நடத்தினார். தானும் 3 நாட்கள் அந்த சூட்டிங்கில் கலந்து கொண்டேன். பின்னர் 6 மாதத்தில் படத்தை முடித்துவிடலாம். படத்தின் லாபத்தில் 25 சதவீதம் தருவதாகவும் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பிறகு பிரான்ஸுக்கு சென்ற நிலையில் 3 மாதங்கள் படம் குறித்து எந்த தகவலும் இல்லாததால் இது குறித்து விஜய் அமிர்தராஜிடம் கேட்டப்போது சில பிரச்சினை காரணமாக படம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் படப்படிப்பு தொடங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சியாமளா

அதன் பிறகு 2019ஆம் ஆண்டு முதல் விஜய் அமிர்தராஜ் மற்றும் இயக்குநர் கோபி நாயினாரை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. இது குறித்து விசாரித்த போது அவர்கள் படம் எடுக்காமல் ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். இயக்குநர் கோபி நயினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளராக உள்ளதால் தலைவர் தொல் திருமாவளவன் தலையிட்டு எனது பணத்தை பெற்று தரவேண்டும். 

முதல்வர் ஸ்டான்லி தனக்கு உதவி புரிய வேண்டும். இலங்கை தமிழ் பெண்ணான என்னை தமிழ் மக்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பணம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றி விட்டனர், என கூறினார். 

ஒரு புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!


 

From around the web