ஆடி மாசத்துல இத்தனை திருவிழாக்களா? இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க... எப்படி வழிபடுவது? என்னென்ன பலன்கள்?!

 
ஆடி மாசத்துக்கு இத்தனை சிறப்புகளா? அம்மன் அருள் கிடைக்க இப்படி செய்து பாருங்க!

ஆடி மாசத்துல இத்தனை திருவிழாக்களா என்று ஆச்சர்யப்படுகிற அளவுக்கு திருவிழாக்களின் மாதமாக இருக்கிறது ஆடி மாதம். இந்துக்களின் பண்டிகைகள் நிரம்பிய மாதமாக மட்டுமல்லாமல் சுதந்திர தினம், ரக்‌ஷாபந்தன் என்று தேசத்தின் திருவிழாக்கள் வருகிற மாதமாகவும் இருக்கிறது ஆடி மாதம்.

ஒவ்வொரு வழிபாடு, கொண்டாட்டங்களுக்குப் பின்னும் ஒரு காரணம் இருக்கிறது. சமீபமாக டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய்கள் அதிகரித்து வருகிறதா? அந்த நோய்களை விரட்டியடிக்கும் மாதமாகவும் ஆடி மாதம் தான் இருக்கிறது. அதனால் தான் வேப்பிலைக் கட்டி அம்மனை வழிபடுகிறோம். கிராமங்களில் இன்றும் வேப்பிலைகளில் வைத்து தான் கூழ் வார்பார்கள்.

இந்த மாதத்தில் இத்தனை திருவிழாக்களும், பண்டிகைகளும் இருக்கிறது என்பதே இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆடி மாதத்தில் என்னென்ன பண்டிகைகள், திருவிழாக்கள் வருகின்றன... அவற்றை எப்படி கொண்டாடுவது, வழிபடுவது? என்னென்ன பலன்கள் என்று பார்க்கலாம் வாங்க.

பொதுவா ஆடி மாதங்களில் சுப காரியங்களைச் செய்ய கூடாதுன்னு சொல்ற நாம, ஆடி மாசத்துல எத்தனைப் பண்டிகைகளையும், திருவிழாக்களையும் கொண்டாடுகிறோம்னு பாருங்க. ஆடி மாசம் ஆகாத மாசம்னு நிறைய பேர் தவறா புரிஞ்சுக்கிட்டு இருக்காங்க. உண்மையில் ஆடி மாசம் என்பது அம்மனுடைய மாதம்.

ஆடி மாதத்தின் பிறப்பில் இருந்து தான் தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி மாதம் வரையிலான ஆறு மாத காலத்தை தட்சிணாயனம் என்கிறோம். இந்த காலங்கள் தேவர்களின் இரவு காலம். இந்த மாதத்தில் சந்திரனின் வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்கிறார்.

பெண்மைக்கு பெருமை சேர்க்கும் மாதம் ஆடி மாதம். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட அம்பிகையின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு. பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடிமாதம் இந்த மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம். ஆடி காற்றில் அம்மியும் பறக்கும் என்பது பழமொழி. ஆடி மாதம் சூறைக் காற்றோடு அம்மனின் அருட்காற்று அளவில்லாமல் வீசும் மாதம் தான் ஆடி மாதம்.

இன்று ஆடி மாசம் பொறந்துடுச்சு! ஆடி 1ம் தேதி ஏன் தேங்காய் சுட்டு கொண்டாடுகிறோம் தெரியுமா?

ஆடி செவ்வாய்

ஆடி செவ்வாய் தேடிக்குளி என்பது முதுமொழி. ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிக்க வேண்டும். இதனால் மாங்கல்ய பலம் பெருகும். இன்றும் தென் தமிழகத்தில் கிராமப்புறங்களில் ஆடி மாதச் செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் கணவனின் ஆயுள் நீடிக்கும். மேலும் குழந்தை வரம், குடும்பத்தில் மகிழ்ச்சி, திருமண வரம் பெறலாம் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

ஆடி ஞாயிறு

ஆடி வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் பலம் அதிகரிக்கவும், திருமணம் வரம் வேண்டியும் விரதம் மேற்கொள்கின்றனர். ஆடி ஞாயிறுகளில் அம்மன் கோவில்களில் நோய்கள் நீங்கவும் ஆரோக்கியம் அதிகரிக்கவும் கூழ் வார்த்து வழிபாடு செய்கின்றனர்.

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் ஆறு மாதம் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும். தந்தை, தாய் இழந்தவர்கள் இந்த தினத்தில் வழிபாடு செய்வது சிறப்பு. தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை இது சிறப்பு வாய்ந்த தினமாக கருதப்படுகிறது.

ஆடி 18ம் பெருக்கு

ஆடி மாதத்தில் பருவமழை பெய்ய தொடங்கி ஆறுகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அந்த வகையில் ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதை மக்கள் ஆடிப்பெருக்கு தினமாக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். அரங்கநாதர் பெருக்கெடுத்து ஓடி வரும் காவிரித் தாய்க்கு சீர்செய்வது வழக்கம்.

ஆடி வெள்ளி பொங்கல் அம்மன் கோயில்

ஆடி கிருத்திகை

ஒவ்வொரு மாதமும் கிருத்திகை வரும் என்றாலும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் இந்த நாளில் பிரார்த்தனைகளை சங்கல்பம் செய்து விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிப்பர்.

ஆடி பூரம்

நம்மை தாங்கும் பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்த நன்னாள் தான் ஆடிப்பூரம். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். சைவ ஆலயங்களில் இந்த தினத்தில் அம்பிகைக்கு வளையல் காப்பும், வைணவ ஆலயங்களில் ஆண்டாள் அவதரித்த தினமாகவும் ஆடிப்பூரம் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

கருட ஜெயந்தி

ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி நாக பஞ்சமியாகவும், கருட பஞ்சமியாகவும் அனுஷ்டிக்கப்படுவது வழக்கம். இந்த நாக பஞ்சமி நாளில் நாக தோஷம் உள்ளவர்கள் ஆலயங்களில் நாக பிரதிஷ்டை செய்து புற்றுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்வார்கள். மறுநாள் கருடாழ்வார் ஜெயந்தி கொண்டாடப்படும். ஸ்வர்ண கவுரி விரதமும் அனுஷ்டிக்கப்படும்.

ஆடி பௌர்ணமி

ஆடி அமாவாசை போலவே ஆடி பௌர்ணமியும் சிறப்பு வாய்ந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் திருநெல்வேலி சங்கரன் கோவிலில் ஆடித்தபசு சிறப்பாக கொண்டாடப்படும். ஆடி மாதத்தின் கடைசி நாளில் மாலை வேளையில் நம் முன்னோர்களுக்குப் படையல் இட்டு கோரிக்கைகளை சமர்ப்பிப்பது வழக்கம். இந்த படையலை முன்னோர்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு ஆசீர்வாதம் செய்வார்கள் என்பது நம்பிக்கை.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web