சந்தானம், நீங்க சங்கியா? செய்தியாளர் கேள்விக்கு பொளேர் பதில் !
சந்தானம் நாயகனாக நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றி விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சந்தானம், நிழல்கள் ரவி, ரவி மரியா, எம்.எஸ் பாஸ்கர், கூல் சுரேஷ், சேஷூ, நடிகைகள் மேகா ஆகாஷ், ஜாக்லின், இயக்குநர் கார்த்திக் யோகி உட்பட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் சந்தானம், வடக்கு பட்டி ராமசாமி படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் ரொம்ப நன்றி. இந்தப் படத்திற்கு நல்ல பாசிட்டிவாக ரிவ்யூ வந்ததற்கு ரசிகர்கள் தான் காரணம். அவர்கள் தான் என்னுடைய படத்தை கொண்டாடுகிறார்கள்.
சந்தானம் பேசுகையில் ஆத்திகராக பார்த்தால் இது சாமி படம், நாத்திகராக பார்த்தால் பகுத்தறிவு பேசும் கதை. கடவுள் பெயரை சொல்லி காசு பார்க்க கூடாது. கடவுள் நம்பிக்கையை கிண் டல், அரசியல் பண்ணக்கூடாது என்பதை விவரிக்கிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. நான் ஆன்மிகவா திதான். சிலர் நீங்க சங்கியா என்று கேட்கிறார்கள்.நான் ஸ்கூல் படிக்கும்போது சங்கீதா என்ற பெண்ணை லவ் பண்ணினேன். அவரை சங்கி...சங்கினு கூப்பிடுவேன். அதற்காக நான் சங்கியா..? என்று கிண்டலடித்தார்.
இந்த படத்தை முதலில் உதயநிதியின் ரெட்ஜெயன்ட் ரிலீஸ் பண்ணுவதாக இருந்தது. அரசியல் சார்ந்த சில பிரச்னைகள் எழுந்ததால் அவர் ரிலீஸ் பண்ணவில்லை. அவர் நட்பு தொடர்கிறது. இந்த படத்துக்காக எழுந்த சர்ச்சை 'கிளியர்' ஆகிவிட்டது. எங்கள் கருத்தை மக்கள் ஏற்றுக்கொண்டதால் படம் வெற்றி பெற்றது. இப்போது மக்களிடம் இறுக்கம், சோகம் அதிகமாக இருக்கிறது. காமெடி, சிரிப்பு தேவைப்படுகிறது.அடுத்து இதே இயக்குனர் படத்தில் நடிக்கப் போகிறேன். அந்தப் படத்துக்கு கவுண்டமணி டயலாக்தான் தலைப்பு என சஸ்பென்ஸ் வைத்தவர் கடைசிவரை பெயரை மட்டும் சொல்லவே இல்லை.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க