அடுத்தடுத்து திருப்பம்... ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக கவுன்சிலர் கைது.. கூவம் ஆற்றிலிருந்து 5 செல்போன்கள் மீட்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்களாக திமுக, அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் என்று கட்சி பேதமில்லாமல் அரசியல் பிரமுகர்களாக தொடர்பு வைத்து ஏதோவொரு வகையில், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கட்சியின் மாநில தலைவரை இத்தனைக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திட்டம் வகுத்து கொலை செய்வதில் அத்தனை ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். இந்நிலையில், நேற்று இந்த கொலை வழக்கு சம்பந்தமாக போலீசார் அதிமுக கவுன்சிலரைக் கைது செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏற்கனவே பொன்னை பாலு உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டு வருகின்றனர்..
இப்படியாக ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு 10 லட்சம் கைமாறியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று புளியந்தோப்பில் அஞ்சலை கைது செய்யப்பட்டார்.. இதையடுத்து மேற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவராக இருந்த அஞ்சலை கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.கஞ்சா வியாபாரம், கந்துவட்டி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த அஞ்சலை மீது 10 வழக்குகள் உள்ளன.அதேபோல் புளியந்தோப்பு காவல்நிலையத்தில் நடந்த ரவுடிகள் பதிவேட்டிலும் அஞ்சலையின் பெயர் இடம் பெற்றுள்ளது. போலீஸ் காவலில் உள்ள அஞ்சலையிடம் நேற்று இரவு முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தெரிந்தே தான் பங்களித்ததாக அஞ்சலை ஒப்புக்கொண்டார்.
மேலும் இந்த பணப்பரிவர்த்தனைகளுக்கு முக்கிய மூளையாக அஞ்சலை செயல்பட்டது தெரிய வந்துள்ளது. எனவே அஞ்சலையின் வங்கி கணக்கு விவரங்களை போலீசார் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் அஞ்சலையும் பாஜகவில் உள்ள பல ரவுடிகள் குறித்து போலீசாரிடம் விவரித்துள்ளார். அஞ்சலையை தொடர்ந்து சென்னை ஐஸ்ஹவுஸை சேர்ந்த எல்லப்பன் என்ற ரவுடியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கொலைக்கு பயன்படுத்திய செல்போன்கள் திருவள்ளூர் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கூவம் ஆற்றில் வீசப்பட்ட 5 செல்போன்களை ஸ்கூபா வீரர்கள் மூலம் காவல்துறையினர் மீட்டனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா