ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் ஒருவர் கைது?... மற்றொரு திருப்பம்!
தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ம் தேதி வீட்டிற்கு அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, பெண் தாதா மலர்கொடி, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை, ஹரிதரன், இவர்களுடன் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., த.மா.கா, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகளுக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இதுவரை இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 27 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்பவரை சென்னை விமான நிலையத்தில் தனிப்படை போலீசார் கைதுசெய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
