ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்.. போலீஸ் பாதுகாப்பு பணி தீவிரம்!

 
ஆம்ஸ்ட்ராங் குடும்பம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூரில் புதியதாக கட்டி வரும் வீட்டிலையே படுகொலை செய்யப்பட்டார்.  ஆற்காடு சுரேஷ் படுகொலையின் பழிக்கு பழியாக நடவ்த இந்த படுகொலை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்ற ரவுடி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் பொற்கொடி

மேலும், பலரிடம் கொலை விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தற்போது கொலை மிரட்டல் வந்துள்ளது. கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் உறவினர்கள் வசிக்கும் அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பு போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!