பாமக தலைமை செய்தித் தொடர்பாளராக அருள் நியமனம்!

 
பாமக அருள்

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளர் எம்.எல்.ஏ அருள். இவர்  சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினராவார். இவர்  இன்று முதல் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

ராமதாஸ்

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் பாமக கட்சி தொடர்பான தகவல்களுக்கு அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் பாமக எம்.எல்.ஏ. அருளை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார்.  மேலும் கட்சி பொறுப்பாளர்கள் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

 ராமதாஸ், அன்புமணி

இந்த நியமனம், பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல்களின் பின்னணியில் நடைபெற்றுள்ளதால் தொண்டர்கள் செய்தவதறியாது திகைத்து நிற்கின்றனர். அன்புமணி தலைமையிலான அணி, கட்சி ஒழுங்கை மீறியதாகக் கூறி அருளை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?