ஆசிய விளையாட்டு போட்டி : இந்திய அணி அறிவிப்பு!!

 
ருத்ராஜ்

19 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில்  நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் செப்டம்பர் 19ம் தேதி நாளை முதல் அக்டோபர் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில்  அதில்  கலந்து கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.  

ருதுராஜ்


செப்டம்பர் 19ஆம் தேதி முதல்  அக்டோபர் 7ம் தேதி வரை சீனாவில்  19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.  இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள்  பட்டியல்:   ருத்ராஜ் தலைமையில் இந்த கிரிக்கெட் அணி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வீரர்கள் பட்டியல் வருமாறு

ருதுராஜ்


ருத்ராஜ் (கேப்டன்), ஜிதேஷ் வர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான், அர்ஷ்திப் சிங், முகேஷ் குமார், ஷிவம் துபே, ப்ரப் சிம்ரன், ஆகாஷ் தீப்இதில்  இந்திய அணியின் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். தரமான   பேட்ஸ்மேன்களாக ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங் போன்ற தரமான பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர்.
 
விக்கெட் கீப்பர்களாக ஜித்தேஷ் சர்மாவும், பிரப்சிம்ரன் சிங்கும் இடம்பெற்றுள்ளனர். ஆல் ரவுண்டர்களாக சபாஷ் அஹமத், வாசிங்டன் சுந்தர் மற்றும் சிவம் துபேவும் இடம் பெற்றுள்ளனர்.  
சுழற்பந்து வீச்சாளர்களாக  ரவி பிஸ்னோயும், வேகப்பந்து வீச்சாளர்களாக ஆவேஸ் கான், அர்ஸ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் மாவியும்  அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஸ்டாண்ட்பை வீரர்களாக  யஷ் தாகூர், சாய் கிசோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் சுதர்சனும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web