இந்தியா தங்கம் வென்று அசத்தல்... ஆசிய விளையாட்டு கிரிக்கெட் இறுதிப்போட்டி!!

 
இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா  9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி  அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதே போல்  ஆப்கானிஸ்தான் அணி, தனது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.



இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய  நிலையில்   டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.  முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான்  18 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 112 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் மழை காரணமாக   அனைத்து போட்டிகளையும் கணக்கில் கொண்டு இந்தியாவிற்கு தங்கம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் இதுவரைஇந்தியா 95க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் 18 ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் இடம் பெறவில்லை. 19 வது ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.  ஆண்கள் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. முதல் அரையிறுதியில் வங்கதேசத்துடன்  மோதிய இந்தியா, டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியா ஆப்கானிஸ்தான்

இந்திய ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாமல்  வங்கதேசத்தின் வீரர்கள் மளமளவென   விக்கெட் சரிந்தன.  20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன் மட்டுமே எடுகக் முடிந்தது.  97 ரன்கள் என்ற மிக எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்தியா  9.2 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.  2வது அரையிறுதியில் ஆப்கானிஸ்தானுடன் மோதிய பாகிஸ்தான் 18 ஓவரில் 115 ரன்னுக்கு சுருண்டது.

இந்தியா ஆப்கானிஸ்தான்

அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 17.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன் எடுத்து வென்று பைனலுக்கு முன்னேறியுள்ள

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web