துணை தாசில்தார் விஷம் குடித்து தற்கொலை... பரபரப்பு...!!

 
பூங்காவனம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த காரை கிராமத்தில் வசித்து வருபவர்  பூங்காவனம். இவர்  மேல்மலையனுார் தாலுகா துணை தாசில்தாராக பணி செய்து வந்தார். கடந்த  3 மாதங்களுக்கு முன் பதவி உயர்வு பெற்றிருந்தார்.  இதற்கு முன் செஞ்சியில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக  பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று காலை வீட்டிலிருந்து அலுவலகம் செல்வதாக கூறிவிட்டு சென்றார்.  

பூங்காவனம்

ஆனால் அலுவலகத்திற்கு செல்லாமல் மேல்மலையனூர்-வளத்தி சாலையில் இறங்கி அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றுள்ளார்.  அங்கு சென்றதும்  பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். அவ்வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத்  தெரிவித்தனர். 

ஆம்புலன்ஸ்


 இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  போலீஸாரின் விசாரணையில் குடும்ப பிரச்சினையால் பூங்காவனம் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும் , கடந்த சில நாட்களாகவே   வயிற்று வலியால் கடுமையாக அவதிப்பட்டு வந்த நிலையில் அதைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.   அவரது மனைவி லட்சுமியிடம்   பூங்காவனத்தின் தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web