பெண் காவலர் தாக்குதல் விவகாரம்.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. இ.பி.எஸ் காட்டம்!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்தவர் காளிகுமார். ஓட்டுனர். நேற்று வழக்கம் போல் பணி நிமித்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். கேத்தநாயக்கன்பட்டி வெளிவாசல் அருகே காளிகுமார் வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் லோடு ஆட்டோவை வழிமறித்து காளிகுமாரை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற டாக்டர்கள், வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் .
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரி அவர்களை போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) September 3, 2024
விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது…
இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின் காளிகுமாரின் உடலை பெறுவதற்காக இன்று காலை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே காளிகுமாரின் உறவினர்கள் திரண்டனர். அருப்புக்கோட்டையில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள், உறவினர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் திரண்டதால் பதற்றமான சூழல் நிலவியது. எனவே அப்பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்ரி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி அருப்புக்கோட்டை தனியார் வங்கி அருகே காளிகுமாரின் உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றபோது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காளிகுமாரின் உறவினர்கள், டிஎஸ்பி காயத்திரியை பெண் போலீஸ் என்றும் பாராமல் அவரைத் தள்ளிவிட்டு, முடியைப் பிடித்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்டதால், போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே தாக்குதலில் காயமடைந்த டிஎஸ்பி காயத்ரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், பெண் டிஎஸ்பி தாக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் X பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரி அவர்களை போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.
திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த வீடியா திமுக அரசுக்கும், பொம்மை முதல்வருக்கும் கடும் கண்டனம்.
அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி அவர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், காவல்துறையினர் உட்பட தமிழ்நாட்டில் அனைவருக்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன், என பதிவிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!