அக்டோபர் 14ம் தேதி சட்டப்பேரவை தொடக்கம்... சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.!
சென்னையில் சபாநாயகர் அப்பாவு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ”தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்டோபர் 14 முதல் நடைபெறும். அக்டோபர் 14ம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்பட்டு சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என அறிவிக்கப்படும்.

அக்டோபர் 14ம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்க உள்ளது. பேரவையில் 8 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். 2025 – 2026ம் ஆண்டு கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கை சட்டமன்றத்தில் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
