அயோத்தி பட பாணியில் நெகிழ்ச்சி சம்பவம்.. 4,000 உடல்களை சொந்த செலவில் தகனம் செய்த இளம்பெண்..!

 
பூஜா ஷர்மா

தனது சொந்த செலவில் 4,000 உடல்களுக்கு இளம்பெண் இறுதி சடங்கு நடத்தி உள்ளார்.

டெல்லியை சேர்ந்த 26 வயது பெண். சாஸ்த்ரா பகுதியில் வசிக்கும் பூஜா ஷர்மா என்ற இளம்பெண், நீண்டகாலமாக மருத்துவமனைகளில் உரிமை கோரப்படாமல் கிடந்த பல உடல்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்து வருகிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்; "கடந்த இரண்டு ஆண்டுகளில், குடும்பத்தினரால் உரிமை கோரப்படாத  அல்லது அனாதையான சுமார் 4,000 உடல்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளேன்.

மரணம் அடைந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வதிலும் புதுமை... ஆன்லைனில் பணத்தை  கட்டினால்போதும்... | Tamil news Innovation in funeral rites for the dead

எனது 30 வயது மூத்த சகோதரர் சிறு சண்டையில் என் முன்னே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் செய்தியைக் கேட்டதும் என் அப்பா கோமா நிலைக்குச் சென்றார். அண்ணனுக்கு நானே இறுதிச் சடங்குகளைச் செய்தேன். அதன்பிறகு நான் இந்த சேவையை செய்து வருகிறேன்.ஆரம்பத்தில் நான் காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனைகளை தொடர்பு கொண்டு குடும்பங்கள் அல்லது காணாமல் போன உடல்கள் பற்றிய தகவல்களைப் பெற்றேன்.

அதன் பிறகு இப்போது காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனைகள் உரிமை கோரப்படாத உடல்கள் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் என்னை தொடர்பு கொள்கின்றனர். இறுதிச் சடங்குகளுக்கு சுமார் 1,000 முதல் 1,200 ரூபாய் வரை செலவாகும். நான் என் தந்தை மற்றும் பாட்டியுடன் தங்குகிறேன். எனது தந்தை கோமாவில் இருந்து வெளியே வந்து தற்போது டெல்லி மெட்ரோவில் ஒப்பந்த ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். என் தாத்தாவின் ஓய்வூதியத்தில், நான் இவற்றைச் செய்கிறேன்.

இந்தப் பணிகளைச் செய்ய நான் பல சவால்களை எதிர்கொள்கிறேன். நான் செய்யும் வேலையை பலர் தடையாக பார்க்கிறார்கள். எனது நண்பர்கள் என்னை சந்திக்க விடாமல் அவர்களது குடும்பத்தினர் தடுக்கின்றனர். மேலும், இந்த பணிகளை மேற்கொள்வதால் எனது திருமணத்தில் பல தடைகள் ஏற்படுகின்றன,'' என்றார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web