கனமழையால் 10 பேர் உயிரிழப்பு... ரெட் அலெர்ட் எச்சரிக்கை!

 
கனமழை


மஹாராஷ்டிரா மாநிலத்தில்  கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, 10 பேர் உயிரிழந்தனர். மும்பை, தானே, நாசிக் உட்பட  இடங்களுக்கு வானிலை மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மஹாராஷ்டிராவில் மும்பை, தானே உட்பட இடங்களில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

கனமழை

மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.  நகரின் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாகின. உடனடியாக மும்பை மாநகராட்சி ஊழியர்கள் தேங்கிய நீரை அகற்றி வருகின்றனர். ஹிண்ட்மாதா, காந்தி மார்க்கெட், சுனாபட்டி, மலாட், தஹிசர் மற்றும் மன்குர்ட் சுரங்கப்பாதைகளில் தேங்கிய தண்ணீரும் பம்பு செட்கள் வைத்து அகற்றப்பட்டன. 

கனமழை

மும்பை, தானே, பால்கர், ராய்காட் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதுவரை மாநிலம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். மழையால் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து 11,800க்கு மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பலகோவில்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக மீட்பு பணி மேற்கொள்ள வேண்டும் என  முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?