அரசு அலுவலகங்களில் மர்ம நபர்கள் அட்டூழியம் ... பொதுமக்கள், அலுவலர்கள் அதிர்ச்சி!
மண்டபம் அருகே மரைக்காயர்பட்டிணம் ஊராட்சியில் அரசு அலுவலகங்களை குறிவைத்து மர்ம நபர்கள் தொடர்ந்து சூறையாடி சேதப்படுத்தும் சம்பவங்கள் இடம்பெறுவதால், அப்பகுதி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.மரைக்காயர்பட்டிணம் ஊராட்சியில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தென்கடலோரப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஊராட்சியில் நூலகம், அங்கன்வாடி பள்ளி, அரசு பள்ளி, ஊராட்சி அலுவலகம், கிராம சபை இ-சேவை மையம், ரேஷன் கடை உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
சமீபத்தில், மர்ம நபர்கள் பல முறை இந்த அலுவலகங்களில் பூட்டுகளை உடைத்து, பொருட்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 3ம் தேதி இரவு, புதிதாக திறக்கப்பட இருந்த அங்கன்வாடி கட்டிடத்தின் பூட்டை உடைத்து சேதப்படுத்தினர். அதேபோல் அருகிலுள்ள ஊராட்சி அலுவலகத்தில் பட்டாசுகளை வெடித்து தீவைக்க முயன்றனர். அதிர்ஷ்டவசமாக, அலுவலக ஆவணங்கள் பாதிக்கப்படவில்லை.
ஊராட்சி நிர்வாகம் இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ளது. ஏற்கனவே ஏப்ரல் மாதத்திலும் நூலக கட்டிடத்தின் கதவுகளை உடைத்து, உள்ளே இருந்த புத்தக ரேக்குகள் மற்றும் மேஜைகள் உள்ளிட்டவை நொறுக்கப்பட்டன.தொடர்ந்து நடைபெறும் இந்த மர்ம சூறையாடல்களால் அரசு அலுவலக பணியாளர்கள் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக, இந்த கடலோரப் பகுதி வழியாக கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு கஞ்சா, கடல் அட்டைகள், பீடி இலைகள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாகவும், அதனை தடுக்கும் நடவடிக்கைகள் போலீசாரால் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், கடத்தல் குழுக்கள் அரசு அலுவலகங்களை தங்களது பொருட்களை மறைப்பதற்காக பயன்படுத்த முயற்சி செய்கிறார்களோ என சந்தேகம் எழுந்துள்ளது. இதற்காக அலுவலகங்களை சூறையாடி அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் கோரிக்கைகள்:
-
அனைத்து அரசு அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் உடனடியாக பொருத்தப்பட வேண்டும்.
-
மரைக்காயர்பட்டிணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இரவு நேர ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
-
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை எஸ்பி சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ச்சியாக நடக்கும் இந்த மர்ம நபர்களின் அட்டூழியத்தால் அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தில் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
