பரபரப்பு வீடியோ... ஸ்ரீரங்கம் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் .... கோவில் நடை மூடல்...

 
ஸ்ரீரங்கம்

 
 வைணவ பக்தர்களால்  பூலோக வைகுண்டமாக  போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இங்கு   உலகம் முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.   இந்நிலையில் ஐயப்ப பக்தர்கள் இன்று காலை அரங்கநாதரை தரிசிக்க வந்தனர்.  பக்தி பரவசத்தில் மூலஸ்தானத்தில் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை வழிபாடு செய்தனர்.  பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் இங்கு   கோவிந்தா கோஷம் செய்யக்கூடாது என கூறினர். 



அவர்கள் கேட்காமல் நாங்கள் பெருமாளை தரிசிக்கும் போதெல்லாம் கோவிந்தா கோஷம் தான் போடுவோம் என பதில் அளித்தனர்.  ஆத்திரமடைந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த கோவில் ஊழியர்கள் 3 பேர் ஐயப்ப பக்தர்களை தாக்கத் தொடங்கினர்.  இதில், ஒரு ஐயப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்தார்.  ஐயப்ப பக்தர்கள் இதனைக் கண்டித்து ரத்தம் சொட்ட சொட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவில் வளாகத்தில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று சொர்க்க வாசல் திறப்பு!! ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சி அட்டவணை!!

 கோவில் ஊழியர்கள் பக்தர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து உடனடியாக கோயில் நடை சாத்தப்பட்டது. சிறிது நேரம் கழித்து  பரிகார பூஜைகளுக்கு பின் மீண்டும் நடை திறக்கப்பட்டது. 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!