துணை முதல்வர் சென்ற கார் மீது தாக்குதல்... பெரும் பரபரப்பு!

 
பீகார்
 

பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது, துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா சென்ற காரின் மீது ராஷ்டீரிய ஜனதா தள (ஆர்ஜேடி) ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். இன்று காலை முதல் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் விஜய் குமார் சின்ஹா போட்டியிடும் லக்கிசராய் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த தொகுதிக்குள் உள்ள கோரியாரி கிராமத்துக்குச் சென்ற விஜய் குமார் சின்ஹாவை, ஆர்ஜேடி ஆதரவாளர்கள் ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து மாட்டுச் சாணம், கற்கள் மற்றும் காலணிகள் அவரது காரின் மீது எறியப்பட்டன. மேலும், அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.

இதுகுறித்து விஜய் குமார் சின்ஹா, “இவர்கள் ஆர்ஜேடி குண்டர்கள். ஆட்சியில் இல்லாதபோதே இவர்களின் அட்டூழியங்களைப் பாருங்கள். என் வாக்குச்சாவடி முகவரை மிரட்டி வெளியேற்றியுள்ளனர். வாக்காளர்களை வெளியே வர விடுவதில்லை,” என்று குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுப்படுத்தினர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!