பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது தாக்குதல்.. கண்ணீர் புகைகுண்டு, சீறிப்பாய்ந்த தோட்டாக்கள்.. !!

 
மணிப்பூர்

மணிப்பூரில் மேமாதம் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக  வெடித்துள்ளது. இதனையடுத்து அங்கு வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.  அங்கே பெண்களுக்கு எதிராக மிக மோசமான சம்பவங்களும் அரங்கேறி அவை சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், வீடியோக்களாக வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.   பெரும் போராட்டத்திற்குப் பிறகுச் சற்று அமைதி திரும்பிய நிலையில், இப்போது மீண்டும் வன்முறை தொடங்கியுள்ளது. சமீபத்தில் 2 மாணவர்கள் கொலை செய்யப்பட்ட படம் வெளியான நிலையில், இந்த வன்முறை தொடங்கியுள்ளது.  

மணிப்பூர்


இந்த சூழலில் மணிப்பூர் தலைநகர் இம்பாலின் புறநகரில் உள்ள மணிப்பூர் முதல்வர் என் பைரேன் சிங்கின் வீட்டை நேற்றிரவு ஒரு கும்பல் தாக்க முயற்சி செய்தது. இந்தப்பகுதியில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ள போதிலும், இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அந்த கும்பலை போலீசார் விரட்டியடித்தனர். தாக்குதல் நடத்திய முதல்வர் இல்லத்தில் முதல்வரோ அவரது குடும்பத்தினரோ தங்கியிருக்கவில்லை. அவரது பரம்பரை வீடு.  மணிப்பூர் முதல்வர் தற்போது வசிக்கும் வீடு முற்றுகையிட்டுத் தாக்கப்பட்டதாக  தவறான தகவல்கள் பரவி வருகின்றன.  


தற்போது மணிப்பூர் முதல்வர் பைரேன் தனியாக மற்றொரு இடத்தில் தான் வசித்து வருகிறார். அங்கே கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து   போலீசார்  "இம்பாலில் உள்ள ஹெய்ங்காங் பகுதியில் உள்ள முதல்வரின் குடும்ப சொத்தாக இருக்கும் வீட்டைத் தாக்கும் முயற்சி நடந்தது. இருப்பினும், அந்த வீட்டில் இருந்து 100-150 மீட்டர் தொலைவிலேயே அந்த கும்பலைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர்.

பைரேன்
வீட்டில் யாரும் இல்லை என்ற போதிலும் அங்கும் பாதுகாப்பு பணி தொடர்கிறது.   இரு வேறு திசைகளில் இருந்து ஒரே நேரத்தில் முதல்வரின் வீட்டை முற்றுகை நடந்தாலும்   அதை வெற்றிகரமாக முறியடித்துவிட்டோம்" என தெரிவித்துள்ளார்.  அந்த கும்பலை விரட்டியடிக்க  முதலில்  போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசினர். போராட்டக்காரர்கள் மேலும் முன்னேறி வராமல் இருக்க அப்பகுதி முழுக்க மின்சாரம் நிறுத்தப்பட்டது . அதிக எண்ணிக்கையில் தடுப்புகளும் போடப்பட்டன. அதன் பிறகே அந்த கும்பல் வெளியேறி சற்று தொலைவில்  சாலையில் அவர்கள் டயர்களை எரித்துள்ளனர். இதனால் சற்று நேரம் அங்கே பதட்டமான சூழல்  நிலவியது.  யாருக்கும் எந்தவொரு காயங்களும் ஏற்படவில்லை.  அப்பகுதியில் இணையதள சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web