ஓடும் பேருந்தில் நடந்த கொடூரம்.. இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபர் கைது..!

 
முகமது ஹாரிஸ்

 ஊட்டியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நேற்று மாலை கேரள அரசு பேருந்து புறப்பட்டது. கூடலூரில் இருந்து பேருந்தில் ஒரு வாலிபர் ஏறினார். அந்த வாலிபர், முன் இருக்கையில் அமர்ந்திருந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இளம்பெண் தூக்கத்தில் இருந்ததால் கவனிக்கவில்லை. பின்னர் அந்த வாலிபர், நைசாக இளம்பெண்ணின் அருகில் அமர்ந்து பலாத்காரம் செய்ய முயன்றார். 

Gudalur, The Nilgiris : கூடலூர்: ஊட்டி-கூடலூர் பலத்த காற்றுடன் மழை:  அனுமாபுரம் பகுதியில் மரம் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு | Public  App

அந்த பெண் அதிர்ச்சியில் அலறியடித்து எழுந்தார் . உடனே சக பயணிகள் எழுந்து கடுமையாக எச்சரித்தனர். இதையடுத்து அந்த பெண் நடத்துனரிடம் புகார் அளித்தார். பேருந்து உடனடியாக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

nilambur fast track court | NEWSGIL

அவர் மலப்புரம் மாவட்டம் கொட்டக்கல் பகுதியைச் சேர்ந்த முகமது ஹாரிஸ் (42) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே கோழிக்கோட்டில் ரயில்வே டிக்கெட் பரிசோதகரை தாக்கியது, மோசடி வழக்கு, குடிபோதையில் வாகனம் ஓட்டியது உள்பட ஏராளமான வழக்குகள் இருப்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின் நிலம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web