மாணவர்கள் கவனத்திற்கு... மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை12 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

 
மருத்துவ முகாம்

இன்று தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூலை 12 வரை கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்களை படிப்பதற்கு பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு மாணவர்கள் நீட் நுழைவு தேர்வு எழுதி, தேர்ச்சி பெறுவது அவசியம் என்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நுழைவு தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன.

நீட் நுழைவுத்  தேர்வு

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு  ஜூன் 28ம் தேதி மாணவர் சேர்க்கைகான விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில் இளநிலை மருத்துப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 10 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 12ம் தேதி புதன்கிழமை மாலை வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது! ஆட்டத்தை ஆரம்பித்த திமுக! மத்திய அரசிடம் அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்!

விண்ணப்பப் படிவங்களை அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnhealth.tn.gov.in/ அல்லது https:// tnmedicalselection.org/ என்ற இணைய தளங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உடைய மாணவ மாணவிகள் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

From around the web