ட்விட்டரில் ஆடியோ, வீடியோ கால் வசதி.. போன் நம்பரே தேவையில்ல!!

 
ட்விட்டர்

2022ல் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்.   ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் தொடர்ந்து அதிரடி  மாற்றங்களை எலான் மஸ்க் மேற்கொண்டு வந்தார். சமீபத்தில் ட்விட்டரின் லோகோவையும் பெயரையும் மாற்றி அறிவித்தார். வருவாயை பெருக்கும் வகையில்  புளு டிக் வசதி பெற கட்டணம் செலுத்தும் வசதியையும் மாதச்சந்தா முறையையும்  அறிமுகம் செய்தார்.

ட்விட்டர்

எக்ஸ் தளம் இனி சூப்பர்-ஆப் ஆக செயல்படும் எலான் மஸ்க் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது  டிவிட்டர் எக்ஸ் தளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகள் இடம் பெற இருப்பதாக அறிவித்துள்ளார்.

ட்விட்டர்

இந்த அழைப்புக்கள்   ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, மேக் மற்றும் பிசி என அனைத்திலும் இது இயங்கும். இதற்கு தொலைபேசி எண் தேவையில்லை. இது தனித்துவமாக இருக்கும் என எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் போஸ்ட் செய்துள்ளார். இருந்தாலும் இது எக்ஸ் தளத்தில் சந்தா செலுத்தி வரும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என பயனர்கள் கூறுகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web