ஆஸ்திரேலியா 236 ரன்களில் ஆல் அவுட்... இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் தொடக்கம்!

 
விராட்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா தற்போது இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு வருகிறது. பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா தொடரை 2–0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், சிட்னியில் இன்று கடைசி ஆட்டம் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 46.4 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அணியின் சார்பில் ரென்ஷா 56 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடியார். இந்திய பந்துவீச்சாளர்களில் ஹர்ஷித் ராணா சிறப்பாக விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து, இந்திய அணி இலக்கை நோக்கி பேட்டிங் தொடங்கியுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா

இந்த ஆட்டத்தில் இந்திய பீல்டர்கள் கணிசமான திறமையைக் காட்டினர். குறிப்பாக விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கேட்ச் பிடிப்பில் ரசிகர்களை கவர்ந்தனர். மேத்யூ ஷார்ட் அடித்த வேகப் பந்தை விராட் கோலி அற்புதமாக பிடித்ததுடன், அலெக்ஸ் கேரி அடித்த பந்தை பின்னோக்கி ஒடி சென்று ஸ்ரேயாஸ் ஐயர் கேட்ச் பிடித்தார். இவர்களின் கேட்ச் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!