உலக ரெக்கார்டில் இடம் பெற்ற ஆட்டிசம் பாதித்த குழந்தைகள்.. 165 கிலோ மீட்டர் கடலில் நீந்தி சாதனை..!

 
ஆட்டிசம் பாதித்த குழந்தைகள்

கடலூரில் இருந்து சென்னை வரை 165 கிலோமீட்டர் தூரம் நீந்திச் சென்று ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் உலக சாதனை படைத்துள்ளனர். பிப்ரவரி 1ஆம் தேதி, ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 14 குழந்தைகள் கடலில் 165 கிலோமீட்டர் நீந்திச் சென்றனர். இந்த நான்கு நாள் தொடர் ஓட்டப் போட்டியின் நிறைவு விழா சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.



இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினரும் செயலாளருமான மேகநாத ரெட்டி, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, 'வேர்ல்ட் ரெக்கார்டு ஆஃப் யூனியன்', குழந்தைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திர பாபு, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் மற்ற குழந்தைகளைப் போல் சாதனை படைக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web