அதிர்ச்சி வீடியோ... ஆட்டோவை கொளுத்தி போராட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுனர்... பெரும் பரபரப்பு.. !

 
ஆட்டோ தீ வைப்பு

தமிழகத்தை போல இந்தியாவில் பல மாநிலங்களில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச   பயணம் ஒரு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தில், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆட்டோ ஓட்டுனர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பெரும் போராட்டம் வெடித்தது. அதன்படி  துணை முதல்வர் இல்லம் முன்பு ஆட்டோவுக்கு டிரைவர் தீ வைத்து, எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


தெலங்கானாவில்   சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ்   வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த நிலையில்  மாநில சாலைப் போக்குவரத்துக் கழக  பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என   காங்கிரஸ்  தேர்தல் வாக்குறுதியை அறிவித்திருந்தது.இத்திட்டத்தை தெலங்கானாவில் 'மகாலட்சுமி திட்டம்' என்ற பெயரில் காங்கிரஸ் அரசு நடைமுறைப்படுத்தியது.  ஆர்டிசி பேருந்துகளில் இலவச பயணத் திட்டத்தால் தங்கள் அன்றாட வருமானம் பாதிக்கப்படுவதாக   ஆட்டோ டிரைவர்கள் புகார் தெரிவித்து  அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வருவாய் இழப்புகளை சமாளிக்க அரசு நிதி உதவி வழங்க வலியுறுத்தி,  பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  

ஆட்டோ தீ வைப்பு


இந்நிலையில் ஹைதராபாத் பிரஜா பவன் அருகே, பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆட்டோ டிரைவர் ஒருவர் நேற்று மாலை தனது ஆட்டோவுக்கு தீ வைத்தார்.  அத்துடன்  தனது உடலிலும் தீவைத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்தார்.   விரைந்து சென்ற போலீஸார் ஆட்டோ ஓட்டுநரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   அரசு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து துணை முதல்வர் இல்லத்தின் முன்பு ஆட்டோவுக்கு தீ வைத்து தற்கொலைக்கு முயன்றதால் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web