காவிரி ஆற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு!

 
ஒகேனக்கல்
 

சென்னை ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டையை சேர்ந்த 38 வயது ஆட்டோ டிரைவர் பிரபு (சாமிநாதன் மகன்) ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இவர் நேற்று நண்பர்கள் 10 பேருடன் சுற்றுலாவுக்காக ஒகேனக்கலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. சுற்றுலா பயணத்தின் போது கோத்திக்கல் காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்தபோது பிரபு ஆழமான பகுதியில் சென்றார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார், நண்பர்கள் காப்பாற்ற முயன்றாலும் முடியவில்லை.

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1,000 கனஅடியாக அதிகரிப்பு!

அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் வழங்கினர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பிரபுவை அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்டு சடலமாக மீட்டனர். பிறகு உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒகேனக்கல் விபத்து

பிரபுவிற்கு கல்பனா என்ற மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். சம்பவம் அவரது குடும்பத்தினருக்கும், சுற்றுலாவிற்குச் சென்ற நண்பர்களுக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?