12 வாரத்துக்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்படும்!!

 
ஆட்டோ

பெட்ரோல் டீசல் விலைக்கேற்ப தமிழகத்தில் ஆட்டோ கட்டணங்களை நிர்ணயிக்கும் படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி  பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த  இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

ஆட்டோ

இதற்கு பதில் அளித்த தமிழக  அரசு, மற்ற மாநிலங்களில் ஆட்டோ கட்டண விகிதத்தையும் கருத்தில் கொண்டு  பரிசீலிக்கப்படும். அதன் பிறகு இந்த நடைமுறை மாற்றியமைக்கப்படும் .   அதற்கான பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த பரிந்துரைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

ஆட்டோ
இதற்காக போக்குவரத்துத்துறை இணை ஆணையர் தலைமையில் குழு ஒன்று  அமைக்கப்பட்டது. இந்த குழுவில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர்,  நுகர்வோர் அமைப்பினர் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இதன்  அடிப்படையில் நிறை, குறைகள் தீர்வுகள் பரிசீலிக்கப்பட்டு  இன்னும் 12 வாரங்களில் ஆட்டோ கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும் எனவும் தமிழக  அரசு தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web