செம... இன்று முழுவதும் 100% ஆட்டோ இலவசம்... மோடி பிறந்தநாள் ஆபர்!!

இன்று செப்டம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியின் 73வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அவருடைய சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜகவை சேர்ந்த பல்வேறு அமைப்புக்கள் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், சூரத் நகரில் ஆட்டோ ஓட்டுநர்கள், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளனர்.
அதன்படி மாநிலம் முழுவதும் சுமார் 1000 ஆட்டோ ஓட்டுநர்கள் 30 சதவீதம் கட்டண சலுகை அறிவித்துள்ளனர். அதே போல் பிரதமரின் 73வது பிறந்த நாள் என்பதால், 73 ஆட்டோ ஓட்டுநர்கள் 100 சதவீதம் கட்டண சலுகை அறிவித்துள்ளனர்.மோடியின் 73வது பிறந்த நாளில் 100 சதவீதம் கட்டணத்தை தள்ளுபடி செய்யும் 73 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அம்மாநில பாஜக எம்.எல்.ஏ. பூர்ணேஷ் மோடி நன்றி கூறியுள்ளார்.
இதற்கு முன் வந்த ஆண்டுகளிலும் இது போன்ற பல சலுகைகளை ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மோடியின் ஓராண்டு ஆட்சி நிறைவில் சதீஷ் பிரபு என்ற ஆட்டோ ஓட்டுநர் அன்றைய தினம் 5 கிமீ தூரம் தனது ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் ரூ1 மட்டுமே கட்டணம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!