”எனக்கு யாரும் இல்லை”.. செண்டிமெண்டா பேசி இளைஞரிடம் 15 லட்சம் வரை ஆட்டைய போட பெண் கைது..!

 
புவனேஸ்வரி

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபி ராஜன் (33). கேட்டரிங் டிப்ளமோ முடித்துவிட்டு அம்பத்தூரில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். தனியார் நாளிதழில் தனது செல்போன் எண்ணை வைத்து விளம்பரம் செய்துள்ளார். இதை பார்த்த ஆவடியை சேர்ந்த சிவஸ்ரீ என்ற பெண் கோபியை தொடர்பு கொண்டு பேசினார். “யாருமே இல்லாத அனாதை, எனக்கு கல்யாணம் ஆகவில்லை, உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என்று கூறி பேசியுள்ளார்.இதை நம்பிய கோபி, சிவஸ்ரீயிடம் பேசி வந்துள்ளார்.இந்நிலையில் சிவஸ்ரீ, "எனக்கு நிறைய கடன் உள்ளது, என்னால் சமாளிக்க முடியவில்லை, தற்கொலை செய்யப் போகிறேன்" என்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கோபி ராஜன் சமாதானம் செய்து அவ்வப்போது தனது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பினார். இதுவரை 15 லட்சம் வரை பணம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து கோபி ராஜன் சிவஸ்ரீயிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.சிவஸ்ரீ திருமணம் பற்றி பேசும்போதெல்லாம் அதை தட்டி கழித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த கோபி ராஜன் ஆவடி சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆவடி மோரை பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி [42] என்பவர் செல்போனில் திருமணம் செய்து கொள்வதாக பேசி ஏமாற்றியதும், அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web