கிருஷ்ணஜெயந்தி ... அவல் லட்டு செய்முறை!!

 
கோகுலாஷ்டமி ஸ்பெஷல்! அவல் லட்டு!

வட இந்தியாவில் மட்டுமல்லாமல், தமிழகத்திலும் கிருஷ்ண ஜெயந்தியை கோலாகலமாக கொண்டாடுகிறோம். கிருஷ்ணர் இரவில் பிறந்தார் என்பதால், அந்தி சாயும் வேளையில் பூஜையை செய்வது நல்லது. வீட்டின் வாசலில் கோலமிட்டு, செம்மண் இட வேண்டும்.

கண்ணனை குழந்தையாகவே பாவிப்பதால், சின்னச் சின்னப் பாதங்களை வாசலிலிருந்து இல்லத்தின் உள்ளே வருவது போல பாதங்களையே கோலமாக வரைந்து பூஜையறை வரையில் கொண்டு செல்லலாம். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து வழிபாடு செய்திட நம் வேண்டுதல் உடனே நிறைவேறும் என்பது ஐதிகம். அந்த வகையில் அவல் லட்டு செய்முறையை பார்க்கலாம்.

அவல் லட்டு


தேவையான பொருட்கள்


அவல் -200கி
உடைத்தக் கடலை -200கி
முந்திரி – 6
திராட்சை – 6
ஏலக்காய்- 2
பால் – 100மிலி
சர்க்கரை – 200கி
நெய் – தேவையான அளவு
தேங்காய் துருவல் – 50கி

கோகுலாஷ்டமி ஸ்பெஷல்! அவல் லட்டு!


செய்முறை
அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வெறுமனே வறுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, காய்ந்த திராட்சையை போட்டு வறுக்க வேண்டும். அதே சூட்டில் தேங்காய் துருவலை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரையை மிக்சியில் ஒரு சுற்று சுற்றி பொடித்துக் கொள்ள வேண்டும்.
அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலப்பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சிறு சிறு லட்டுகளாக சூட்டுடன் பிடித்து வைக்க வேண்டும். கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த அவல் லட்டு நிமிடங்களில் உடனடியாகத் தயார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web