இமயமலையில் பனிச்சரிவு... மலையேற்ற வீரர்கள் 7 பேர் பலி; 4 பேர் மாயம்!
இமயமலைப் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டதில் உள்நாட்டு, வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் உயிரிழந்த துயரச்சம்பவம் நேபாளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளம்-இந்தியா எல்லைப்பகுதியை ஒட்டி உள்ள இமயமலை, ஆண்டுதோறும் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சாகச வீரர்களை ஈர்க்கிறது.

இதன்கீழ் நேபாளத்தின் டொலஹா மாவட்டத்திலிருந்து 15 பேர் கொண்ட மலையேற்ற குழு யலொங் ரி சிகரத்தை நோக்கி ஏறிச் சென்றது. 5,630 மீட்டர் உயரத்தில் அமைந்த அடிவார முகாமில் இவர்கள் தங்கியிருந்தபோது திடீரென மிகப்பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது.
அச்சம்பவத்தில் மலையேற்ற வீரர்கள் பலர் பனியில் புதைந்தனர். இதில் 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். உயிரிழந்தவர்களில் 3 பேர் அமெரிக்கா, ஒருவர் இத்தாலி, ஒருவர் கனடா மற்றும் 2 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 4 வீரர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 4 பேர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடும் குளிர், பேரழிவு அபாயம் காரணமாக மீட்பு முயற்சிகள் சிரமப்பட்டாலும், சிறப்பு மீட்பு படையினர் தொடர்ந்து தேடுதல் பணி மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் இமயமலைப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மீண்டும் கேள்வி எழுப்பி, சுற்றுலா மற்றும் மலையேற்ற அமைப்புகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
