ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் இடிப்பு... சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர். இந்த தியேட்டர் கொரோனா லாக்டவுனுக்கு முன்பு வரை செயல்பட்டு வந்தது. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக கடந்த 50 ஆண்டுகளாக திகழ்ந்த இந்த தியேட்டரில், ரூ.40 முதல் அதிகபட்சம் ரூ.60 வரை மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தியேட்டரை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகரில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் அதிகரித்து வருவதாலும், பராமரிப்பு செலவுகள் உயர்ந்திருப்பதாலும், தனி தியேட்டர்கள் லாபகரமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஏவிஎம் குழுமத்தினர் ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக, தியேட்டர் முழுவதையும் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முன்னதாக சென்னை கே.கே நகர் உதயம் காம்ப்ளக்ஸ், தண்டையார்பேட்டை எம்.எம் தியேட்டர், பெரம்பூர் ஸ்ரீபிருந்தா தியேட்டர் இடிக்கப்பட்டன. அந்த வரிசையில் தற்போது ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் இடிக்கப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
