பாம்பே ஜெயஸ்ரீக்கு விருது... குவியும் பாராட்டுக்கள்!

 
பாம்பே ஜெயஸ்ரீ

டில்லியில் உள்ள தேசிய இசை, நடன, நாடக அகாடமி எனப்படும் சங்கீத நாடக அகாடமி, கலைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு அகாடமி ரத்னா, அகாடமி புரஸ்கார், அகாடமி யுவ புரஸ்கார் விருதுகளை வழங்கி வருகிறது.

 அகாடமியின் கவுன்சில் கூட்டத்தில், 2022, 2023 ஆண்டுகளுக்கான விருதுகளை பெறும் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. 6 பேருக்கு அகாடமி ரத்னா விருதும், 92 'பேருக்கு அகாடமி புரஸ்கார் விருதும் 80 இளம் கலைஞர்களுக்கு உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவபுரஸ்கார் விருதும் வழங்கப்படுகிறது.

பாம்பே ஜெயஸ்ரீ

அகாடமி ரத்னா விருது நாட்டார் கலை இலக்கிய எழுத்தாளர் விநாயக் கடேகர், வீணை இசைக்கலைஞர் ஆர். விஸ்வேஸ்வரன், கதக் நடன கலைஞர் கனயனா ஹசாரி லால், குச்சிபுடி கலைஞர் தம்பதி ராஜா, ராதா ரெட்டி, நாடக இயக்குனர் துலால் ராய், நாடகஆசிரியர் டி பி சின்கா ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.

பாம்பே ஜெயஸ்ரீ
சங்கீத நாடக அகாடமி புரஸ்கார் விருதுக்கு பாடகி ஜெயஸ்ரீ, நடிகர் அசோக் சராப், ராஜீவ் வர்மா, கதகளி கலை ஞர் மார்கி விஜயகுமார். மோகினியாட்டம் கலைஞர் பல்லவி கிருஷ்ணன் உள்ளிட்ட 92 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தாமிர பட்டயத்துடன், ரத்னா விருதுக்கு ரூபாய் 3 லட்சம், புரஸ்கார் விருதுக்கு ரூபாய் 1 லட்சம், யுவபுரஸ்கார் விருதுக்கு ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இதற்கான நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கவுரவிப்பார் என சங்கீத நாடக அகாடமி தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web