3600கிலோ , 108 அடி நீளமுள்ள ஊதுபத்தி ஏற்றப்பட்டது... 45 நாட்களுக்கு நறுமணத்தில் அயோத்தி... !

 
ஊதுவத்தி

உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் புதிதாக கட்டுப்பட்டுள்ள ராமர் கோவிலில் ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது அத்துடன் ராம்லல்லா சிலையும் நிறுவப்பட உள்ளது.   கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் பலர் கோவிலுக்கு ஏராளமானோர் பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில்   குஜராத்தின் வதோதரா நகரில் தயாரிக்கப்பட்ட 108 அடி நீள ஊதுவத்தி அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.3,610 கிலோ எடையும், மூன்றரை அடி சுற்றளவும் கொண்ட இந்த வாசனை ஊதுவத்தி இன்று ஏற்றி வைக்கப்பட்டது.   இதன்மூலம் அயோத்தியில் நறுமணம் பரவத் தொடங்கியுள்ளது. இந்த ஊதுவத்தியின் நறுமணம் சுமார் 50 கிமீ தூரம் வரை வீசுவதாக அயோத்தி மக்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். ஊதுவத்தியை ஏற்றியபோது பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் எழுப்பினர்.  

அயோத்தி நகர் முழுவதுமே பல வருடங்கள் கழித்து விழாக்கோலம் பூண்டுள்ளது. கிட்டத்தட்ட ராமர் பட்டாபிஷேக விழாவைப் போல அயோத்தி நகர் காணப்படுகிறது. இம்மாதம் 22ம் தேதி அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு வைபவத்தை முன்னிட்டு அயோத்தி  முழுவதுமே உச்ச பாதுகாப்பு நடவடிககைகளில் உத்திரபிரதேச மாநில போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்தியாவின் உச்ச பாதுகாப்புக்கு உரிய அரசியல் முக்கியஸ்தர்கள், பலதுறை பிரபலங்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அயோத்தி ராமர் கோயிலில் குவிய இருக்கின்றனர்.

ஊதுவத்தி

இவர்களில் பெரும்பாலானோர், ஏற்கனவே பல வகையிலும் பாதுகாப்பு வளையத்துக்கு உட்பட்டவர்கள். எனவே கோயில் வளாகத்திலும் பல்லடுக்கு பாதுகாப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விவிஐபி பாதுகாப்புக்கு பொறுப்பான ஏஜென்சிகள் தனியாக மெனக்கிட்டாலும், ஒட்டுமொத்த பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை உபி போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இதற்காக வானிலிருந்து கண்காணிக்கும் ஆளில்லா சிறு விமானங்களான ட்ரோன்கள், கேமராக்களுடன் வளையவர இருக்கின்றன. ஆகாயத்தை விட தரையில் அதிகப்படி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் அயோத்தி மாவட்டத்தில் 10,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு டிஜிபி பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.

இவை தவிர்த்து காவல்துறைக்கு உதவும் வகையிலான நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் அனைத்தும் அயோத்தி மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ளன. போலீஸாரின் கண்காணிப்புக்கான ட்ரோன்கள் தவிர்த்து, ஊடுருவல் ட்ரோன்களை தடுத்து அழிப்பதற்கான ட்ரோன் எதிர்ப்பு சிஸ்டமும் அங்கே நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் உதவியுடன், அங்கீகரிக்கப்படாத எந்த ஆளில்லா விமானத்தையும் எளிதாக கட்டுப்படுத்த முடியும்.

ஊதுவத்தி

கண்காணிப்புக்கு அப்பால் அயோத்தி கோயிலை நோக்கிச் செல்லும் சாலைகள் அனைத்தும் தூய்மை செய்யப்பட்டும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும், உரிய பாதுகாப்புகளுடன் தயார் நிலையில் உள்ளன. கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அயோத்தி கோயில் விழாவின் பொருட்டு, அங்கே உலகின் அதிநவீன தொழில்நுட்ப அமைப்புகள் அனைத்தும் நிறுவப்பட்டுள்ளன.

 தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web