அயோத்தி ராம ஜென்மபூமி... வரலாற்றில் மறக்க முடியாத நாள்.. ரஜினி பேச்சு!

 
அயோத்தி

நாடு முழுவதுமே அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து சந்தோஷத்திலும், கொண்டாட்டத்திலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டுள்ளார். மைசூரை அடிப்படையாகக் கொண்ட ஸ்தபதி (சிற்பி) அருண் யோகிராஜ் வடிவமைத்த ஸ்ரீராமர் சிலைதான் பிரதிஷ்டை செய்வதற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

அயோத்தி

இன்று நண்பகல் 12.20 மணிக்கு கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட நிலையில், நாடு முழுவதும் அயோத்தி கும்பாபிஷேக விழா,பல்வேறு ஆலயங்களிலும், பொதுஇடங்களிலும் நேரலையில் திரையிடப்படுகிறது. பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்து வருகின்றனர். 

tn
இந்நிலையில்  சென்னை விமான நிலையத்தில் அயோத்தி புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்,  “ராமஜென்ம பூமிக்கு செல்வதில் மகிழ்ச்சியாக உள்ளேன். 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஒரு பிரச்சினை இது. உச்சநீதிமன்றம் இதற்கு தீர்வு கொடுத்தது. தற்போது அது நிறைவேறியிருக்கிறது. இந்த நாள் வரலாற்றில் மறக்க முடியாத முக்கியமான நாள்” என்றார். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web