அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்... எந்தெந்த மாநிலங்களுக்கு விடுமுறை...!

 
அயோத்தி

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி   ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. திறப்பு விழாவுக்காக தயாராகும் அயோத்தியில் இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தியா முழுவதும் இருந்து ஆன்மிகவாதிகள், அரசியல்வாதிகள், பிரபலங்கள், திரைநட்சத்திரங்கள், துறவிகள் என 7000க்கும் மேற்பட்டோர் அழைக்கப்பட்டுள்ளனர். மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த விழாவினையொட்டி அயோத்தியில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

அயோத்தி ராமர் கோவில்

இது குறித்து மத்திய அரசு விடுத்த செய்திக்குறிப்பில்  , 'ராம் லல்லா கும்பாபிஷேக விழா இந்தியா முழுவதும் 2024 ஜனவரி 22ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும், பணியாளர்களும் இதில் கலந்து கொள்ளும் வகையில் அன்றைய தினம்  அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்கள் அரைநாள் விடுப்பு வழங்கப்படுகிறது.  பொது மக்களின்  ஆர்வத்தின் அடிப்படையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதாக  மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.  மேலும்  'அயோத்தி கோவில் திறப்பு விழா குறித்து   பொதுமக்களிடம் இருந்து அதிக கோரிக்கை எழுந்துள்ளது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில்  ஜனவரி 22ம் தேதியன்று அரை நாள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.   ராமர் கோயில் கருவறையில் ராம்லாலாவின் புதிய சிலை கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.


இதற்காக சில மாநிலங்கள் முழு நாள் விடுமுறையும், சில மாநிலங்களில் அரை நாள் விடுமுறையும், மேலும் சில மாநிலங்களில் பகுதி விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது .

அதன்படி 


உத்தரபிரதேசம்:   

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜனவரி 22ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நாளில் இறைச்சி மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.  


மத்திய பிரதேசம்:   

அனைத்து பள்ளிகளும், ஜனவரி, 22ல் மூடப்படும் மக்கள் பண்டிகையாக கொண்டாடும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, முதல்வர்  தெரிவித்துள்ளார்.  

ராஜஸ்தான்:

ஜனவரி 22ம் தேதி திங்கட்கிழமை  அரை நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இம்மாநில கேபினட் அமைச்சர்   நாள் முழுவதும் விடுமுறை அறிவிக்க முதல்வரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.  

சத்தீஸ்கர்: 

சத்தீஸ்கரில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 22ம் தேதி விடுமுறை.

அயோத்தி

ஹரியானா: 

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. உலர் தினமாக கடைப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

அஸ்ஸாம்:  

அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை  அலுவலகங்கள்   பிற்பகல்   2:30 மணிக்கு மேல்  திறக்கப்படும்.

திரிபுரா: 

திரிபுராவில்  அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்  பிற்பகல் 2:30 மணி வரை மூடப்படும்.

கோவா: 
கோவாவில் அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 22ம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

ஜனவரி 22ம் தேதி முழுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web