சிலிர்க்கும் பரவசம்... ஏஐ தொழில்நுப்டத்தில் கண்களை சிமிட்டும் அயோத்தி ராமர்.. வைரல் வீடியோ...!

 
அயோத்தி ராமர்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில்  ராமர் கோவில் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து 7000க்கும்மேற்பட்ட விவிஐபிக்கள் கலந்து கொண்டனர். கருவறையில் உள்ள 5 வயது பால ராமரின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது குறித்த வீடியோ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  இந்நிலையில் தான் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அயோத்தி பால ராமர்  கண்சிமிட்டும் சிலை குறித்த   வீடியோ வெளியாகி பார்க்கும் அனைவரையும் புல்லரிக்க வைக்கிறது.   பிரதமர் மோடி பிரான் பிரதிஷ்டை சடங்குகளை செய்து  சிலையின் கண்களை திறந்தார்.


அயோத்தி ராமர்  சாந்தமான முகத்தில் புன்முறுவல் சிரிப்போடு காட்சி அளிக்கிறார். இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து அதிகாலை  3 மணி முதலே கோவிலில் மக்கள் குவிந்து போட்டி போட்டு கொண்டு கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.  இன்று 5 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது  ராமர் குறித்த வீடியோக்கள் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சிரித்த முகத்துடன் தலையில் கிரீடம், கையில் வில், உடலில் நகைகள் அணிந்து சாந்தமான  முகத்துடன் ராமர் காட்சியளிக்கிறார்.  இந்த வீடியோவில்  அயோத்தி ராமர் கோவில் கருவறையில் நேற்று  ராமரின் சிலையின் கண்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் தான் இந்த சிலை தலை திருப்பி பக்தர்களை நோக்கி அங்கும் இங்கும் பார்த்து கண்களை சிமிட்டி புன்முறுவல் செய்வது போல் உள்ளது.

அயோத்தி ராமர்

இந்த ராமர் சிலையை கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்துள்ளார்.   சிலையின் மொத்த உயரம் என்பது 51 இன்ச் ஆகும். 200 கிலோ எடை கொண்டது.  அதில் விஷ்ணுவின் 10 அவதார வடிவங்கள் சிற்பமாக இடம் பெற்றுள்ளது.  மேலும் சங்கு, சக்கரம், தாமரை, கதை, பிரணவம், சுவத்திகம், போன்ற சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. சிலையின் கீழ் பகுதியில் நவக்கிரங்களான சூரியன், புதன், சுக்கிரன், குரு, ராகு கேது, வெள்ளி, சந்திரன், செவ்வாய், சனி  சிற்பங்கள் உள்ளன.   ஒவ்வொரு ஆண்டின் ராமநவமி தினத்தில் சூரியஒளி ராமர் சிலையின் நெற்றியின் விழும்படி கருவறை வடிவமைக்கப்பட்டு இருப்பது  குறிப்பிடத்தக்கது.
 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web