101 வயதில் முதன் முறையாக சபரிமலை ஐயப்ப தரிசனம்... பரவசத்தில் மூதாட்டி...!!

 
பாருக்குட்டியம்மா

 
கார்த்திகை மாதம் தொடங்கினாலே திரும்பும் திசையெல்லாம் ஐயப்பன் கோஷங்கள். அதிகாலை துயில் எழுந்து குளித்து விரதம்  இருந்து சாமியே  சரணம் ஐயப்பா என பக்தி பரவசத்துடன் ஆலயம் செல்பவர்களை காணக் காண  நாத்திகர்களுக்கு பக்தி பீறிடும். சபரிமலையை பொறுத்தவரை 10 வயது முதல் 50 வயது பெண்களுக்கு அனுமதி கிடையாது.  கேரளாவில் 101 வயது மூதாட்டி சபரிமலைக்கு  முதன் முறையாக ஐயப்பனை தரிசிக்க சென்றார்  

ஐயப்பன் சபரிமலை இருமுடி

கேரளா மாநிலம், வயநாட்டில் உள்ள மூன்னானகுழியில் வசித்து வருபவர்  பாருக்குட்டியம்மா.  இவருக்கு வயது  101 . இவருக்கு ஐயப்பனை தரிசிக்க நெடுநாளைய கனவு. இந்த தள்ளாத வயதிலும்  தனது பேரன்களுடன் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க சென்றிருந்தார்.  வயது முதிர்ந்த மூதாட்டி என்பதால் பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக அவர்களை அழைத்து 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசிக்க சிறப்பு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது. 1923ல் பிறந்த பாருக்குட்டியம்மா, தனது சிறுவயதில் சபரிமலை கோயிலுக்குச் செல்ல ஆசைப்பட்டார்.

சபரிமலை

ஆனால்  அத்தனை எளிதாக  அது நடந்துவிடவில்லை. லௌகீக வாழ்க்கையின்  அன்றாட அலுவல்கள் அடுத்தடுத்த கடமைகள்  என ஓடிக்கொண்டே இருந்தார் .   100 வயதைக்  கடந்த பிறகு கோயிலுக்குச் செல்ல முடிவு செய்து வந்தததாக கூறினார்.100 வயதை கடந்து ஐயப்பனை தரிசித்த அந்த மூதாட்டிக்கு தேவசம்போர்டு சார்பில் சால்வை அணிவித்து முதல் மரியாதை அளிக்கப்பட்டது. பம்பை நதியில் இருந்து டோலி மூலம் சபரிமலைக்கு ஏறி வந்திருந்தார்  பாருக்குட்டியம்மா என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web