பாபர் மசூதி இடிப்பு தினம்... இந்தியா முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு....!!

 
ஞானவாபி மசூதி

1992  டிசம்பர் 6ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில்  அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் பாபர் மசூதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  தமிழகத்தை பொறுத்தவரை மாநிலம் முழுவதும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பாக கோவையில்   2000 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  அத்துடன் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், அதிக கூட்டம் கூடும்  பேருந்து  நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், வழிபாட்டுத் தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்!! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர், பொள்ளாச்சி, உக்கடம், சூலூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு என முக்கிய பேருந்து நிலையங்களில் காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வரும் பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிவோரை விசாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெடிகுண்டு நிபுணர்களும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.    

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்!! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

மாநிலம் முழுவதும்   முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் என முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கே வரும் பக்தர்களும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள். மேலும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் மார்க்கெட்டுகள், கடைவீதிகளிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.   விமான நிலையங்களிலும்    3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  முக்கிய கோயில்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் போலீசார்  தொடர்ச்சியாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  தலைநகர் சென்னையில் மட்டும் 10000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
மேலும் மாநில, மாவட்ட எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் இருக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web