அட.. 26 விரல்களுடன் பிறந்த அதிசய பெண்குழந்தை!! வைரல் வீடியோ!!

 
26 விரல் குழந்தை

குழந்தை பிறப்பு என்பது கடவுள் கொடுத்த வரம் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வௌர்ம் நம்பிக்கை. இதில் சில அதிசய, ஆச்சர்ய பிறப்புகளும் சில சமயம் ஏற்படலாம்.  மூன்று கை, வாலுடன் குழந்தை, பிறந்ததும் தட்டை தூக்கிய குழந்தை என சில அதிசய நிகழ்வுகளும் நடைபெறுவதுண்டு. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம்  பரத்பூரில் 26 விரல்களுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது.  இதனை  அவரது குடும்பத்தினர் அவளை "தெய்வ அவதாரம்" என கொண்டாடுகின்றனர். புதிதாக பிறந்த குழந்தையின்   ஒவ்வொரு கையிலும் ஏழு விரல்கள் மற்றும் ஒவ்வொரு காலிலும் ஆறு விரல்களும் உள்ளன.  

குழந்தை தோலகர் தேவியின் அவதாரமாக அவரது குடும்பத்தினரால் கருதப்படுகிறது. இது குறித்து மருத்துவர்கள்  ஒருவகையான மரபணு கோளாறு எனக் கூறுகின்றனர்.  26 விரல்கள் இருப்பது இயல்பானது .இருந்தாலும் கைகளில் 7 விரல்கள், கால்களில் 6 விரல்கள் அசாதாரணம் மற்றும்   அரிதானது என்றும் கூறியுள்ளனர். எனினும் இந்த கூடுதல் விரல்களால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது எனவும் மருத்துவர்கள்தெரிவித்துள்ளனர்.  

26 விரல் குழந்தை


 பொது சமூக மருத்துவமனையில் சர்ஜு தேவிக்கு பெண்குழந்தை பிறந்திருப்பதகாவும்,   தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர் சோனி தீபக் தெரிவித்தார். இந்தக் குழந்தையின் வருகையால் லட்சுமி எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார் என்று குழந்தையின் மாமா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர்   “ குழந்தை பிறந்ததில் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர், மேலும் அவரை தோலகர் தேவியின் அவதாரமாகவே கருதுகிறோம்.  என் சகோதரிக்கு 26 விரல்கள் கொண்ட குழந்தை பிறந்ததில் மிகுந்த மகிழ்ச்சி.” எனத் தெரிவித்துள்ளார். குழந்தையின் தந்தை கோபால் பட்டாச்சார்யா, மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் தலைமைக் காவலர்   என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web