ஸ்ரீராம... ராம... கருவறையில் வைக்கப்பட்ட குழந்தை ராமர் சிலை.... வைரல் வீடியோ... பக்தர்கள் நெகிழ்ச்சி... !

 
ராமர்

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கோவிலில்   ராமர் கோயிலில் ராமரின் குழந்தை வடிவமான ராம்லல்லாவின்  கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் முதல் படமும் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ராம பக்தர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 22ம் தேதி சிறப்பு பூஜைக்குபின் இந்த சிலையின் கண்கள் திறக்கப்படும் என அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  



ராமர் கோயிலுக்கான இந்த ராம்லல்லா சிலையை செய்தவர்  கர்நாடகாவின் பிரபல சிற்பி அருண் யோகிராஜ் . இந்த சிலையை  கருவறையில் ஸ்ரீ ராமர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு பல்வேறு சடங்குகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டன. பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு காசியில் இருந்து வந்திருந்த அர்ச்சகர்கள் முழு சடங்குகளுடன் சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த நிகழ்வுகள் எல்லாம் முடிந்ததும், கருவறையிலிருந்து குழந்தை வடிவமான ராம்லல்லாவின் முதல் படம் நேற்று இரவு வெளியாகியுள்ளது.  



ஷியாமல் கல்லில் வடிவமைக்கப்பட்ட   5 வயதான குழந்தை ராமர் சிலை  தாமரையின் மீது நிற்பது போன்று  வடிவமைக்கப்பட்டு உள்ளது. தாமரை மற்றும் ஒளிவட்டம் இருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ள இந்த சிலை 150 கிலோ எடையுள்ளது. இதன் மொத்த உயரம் 7 அடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   
ஜனவரி 18ம் தேதி புதன்கிழமை  விவேக் சிருஷ்டி அறக்கட்டளையிலிருந்து லாரியில் ராமர் கோயிலுக்கு ராம்லல்லா சிலை கொண்டுவரப்பட்டது. கோயில் வளாகத்திற்குள் கிரேன் உதவியுடன்  சிலையை கொண்டு செல்லப்பட்டது.  கருவறையில் கடவுள் அசையும் மற்றும் அசையாத  என 2 வடிவில் இருப்பார்.  கும்பாபிஷேகத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன . இந்நிலையில் ஜனவரி 16  முதல்  மங்களகரமான சடங்குகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web