பகீர்... 17 வயது சிறுவன் போதை பொருட்கள் விற்பனை!
Oct 17, 2025, 19:00 IST
சுதந்திரா நகரில் போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, முன்தினம் அந்த பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்துக்குரியவாறு சுற்றி வந்த சிறுவனை கவனித்தனர்.

சோதனை செய்த போது, சிறுவனிடம் 2 போதை ஊசிகள் மற்றும் 5 போதை மாத்திரைகள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என உறுதியாகத் தெரியவந்தது. சிறுவனை சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர் செய்த பின்னர், அரசு கூர் நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
