அள்ளுபிடி ஆபர்... 5, 10பைசா நாணயங்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி... !

 
பிரியாணி

அசைவ உணவுப்பிரியர்களில் பிரியாணி பிரியர்கள் என்றே ஒரு தனி வகை உண்டு. இவர்களில்  பலர் வாரத்திற்கு ஒருநாளாவது பிரியாணி சாப்பிட்டு விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  பிரியாணி  வெறியர்கள் சிலர் வாரத்தில்   4 அல்லது 5 நாட்கள் கூட தொடர்ந்து பிரியாணியை ஒரு கட்டு கட்டி விடுவர்.  அந்த அளவுக்குப் பிரியாணி என்பது மக்களின் உணவுப்பிரியர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துவிட்டது.  வீட்டில் நடைபெறும் விருந்துகளிலும் பிரியாணிக்கென்றே ஒரு கூட்டம் கிளம்பி விடுகிறது.  உணவகங்கள் சில இப்படிப்பட்டவர்களுக்காகவே கவர்ச்சிகரமான அறிவிப்புக்கள், அதிரடி ஆஃபர்களை அறிவித்து விடுகின்றன.   

பிரியாணி
கரூர் மாவட்டம் குளித்தலையில், கரூர் - திருச்சி பழைய நெடுஞ்சாலையில்  ஆர்.ரஹ்மான் திண்டுக்கல் பிரியாணி  கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டது. வாடிக்கையாளர்களை கவரவும்,  கடையைப் பிரபலப்படுத்தவும்    3 நாட்களுக்கு  பிரியாணி திருவிழா நடத்தப்பட்டது. அதில், ஞாயிற்றுக்கிழமையான இன்று ஒருநாள் மட்டும் 1 பைசா, 2 பைசா, 5 பைசா, 10 பைசா என பழைய செல்லாத நாணயங்களுக்கு  சிக்கன் பிரியாணி இலவசம் என அறிவிப்பு செய்யப்பட்டது. இது குறித்த  பிட் நோட்டீஸ்கள்,  போஸ்டர்களும் ஊர் முழுக்க ஒட்டப்பட்டது. இந்த போஸ்டர்களை பார்த்த மக்கள் தங்கள் வீடுகளிலிருந்த பழைய காசுகளைத் தேடிப்பிடித்து பிரியாணி வாங்கி செல்ல முண்டியடித்தனர்.  காலையிலேயே கடையில் கூட்டம் குவியத் தொடங்கியது.   நீ, நான் என வாடிக்கையாளர்கள் போட்டிப் போட்டதால், அங்கு தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

பிரியாணி


இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக உணவகத்துக்கு சென்ற  போலீஸார் அங்கு விரைந்து சென்று, கடையின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டனர். பொதுமக்களிடையே   பிரியாணி இல்லை எனக் கூறி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். காலை 9 மணி முதல் காத்துக் கிடக்கிறோம்.  முன்னேற்பாடுகளை செய்யாமல் அறிவிப்பு வெளியிட்ட  கடை உரிமையாளர் மீது பிரியாணி பிரியர்கள் புகார் தெரிவித்தனர். பிரியாணி கிடைக்காத பெரும்  ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web