அரிசியை தொடர்ந்து சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை?!

 
சர்க்கரை

இந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால்  உணவு பொருட்களின் விலை கடுமையாக உயரும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  இனிவரும் காலம் அடுத்தடுத்து பண்டிகைகள் தான். இதனால்  சர்க்கரை தேவையும் அதிகரிக்கும். இதனால் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  மழையின்மையின் காரணமாக கரும்பு விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் சர்க்கரை

இதனால் சர்க்கரை உற்பத்தி இந்தியாவில் வெகுவாக குறைய வாய்ப்புள்ளதால் மத்திய அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இதன்படி 7  ஆண்டுகளுக்கு பிறகு சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து ஆலோசனை நடைபெற்று   வருகிறது. அக்டோபரில் மாதத்தில் தொடங்கும் புதிய பருவத்தில் இருந்து சர்க்கரை ஆலைகளின் ஏற்றுமதியை தடை செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இங்கு உணவு பொருட்களின் விலை கடுமையாக உயரக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர் பொருளாதார நிபுணர்கள்.  உள்நாட்டு சர்க்கரை தேவையை பூர்த்தி செய்து கொள்ளவும், உபரி கரும்பிலிருந்து எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இதனால் அக்டோபர் பருவத்தில் சர்க்கரை ஏற்றுமதிக்கு  வாய்ப்பு இருக்காது.  2024ல்  நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சர்க்கரை
கடந்த சீசனில் 11.1 மில்லியன் டன் சர்க்கரையை விற்பனை செய்ய  அனுமதித்தது. ஆனால்   நடப்பு சீசனை பொறுத்தவரை  செப்டம்பர் 30 வரை 6.1 மில்லியன் டன் சர்க்கரையை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது.  2016ல்  த்த இந்தியா சர்க்கரை ஏற்றுமதிக்கு 20 %   வரி விதித்தது. மேற்கு மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் தென் பகுதிகளில் பருவமழை சரியாக இல்லாததால் சர்க்கரை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. அதாவது இந்தியாவின் மொத்த சர்க்கரை உற்பத்தி தற்போது வரை சராசரியாக 50% குறைவாக உள்ளது. பணவீக்கம் அதிகரித்து வருவதால் சர்க்கரை விலை கடந்த  2  ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கரும்பு ஆலைகள் ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலாக 2,00,000 டன் சர்க்கரையை விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.44% ஆகவும், உணவுப் பணவீக்கம் 11.5% ஆகவும் உயர்ந்துள்ளது. இது  கடந்த 3  ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜூலையில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த ஆண்டு இறுதியில் மாநிலத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கபட்டுள்ளது. இதன் அடிப்படையில் வெங்காய ஏற்றுமதிக்கு கடந்த வாரம் 40% வரி விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web