முதல்ல நிறுத்துங்க... தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு தடை... மோடிக்கு ஸ்டாலின் கண்டனக் கடிதம்!!

 
மோடி ஸ்டாலின்

தேசிய மருத்துவ ஆணையம்  புதிய கட்டுப்பாடுகளை தமிழகத்திற்கு விதித்துள்ளது. அதன்படி தமிழகத்தில்   மருத்துவக் கல்லூரிகளும்,   மாணவர் சேர்க்கையும் தேவைக்கு அதிகமாக உள்ளது . இதன் அடிப்படையில் இனி வரும் நாட்களில்  புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்கவும், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் தடை விதித்துள்ளது.  இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மோடி ஸ்டாலின்

இது குறித்து பிரதமர் மோடிக்கு காட்டமான கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்  “ மருத்துவ கல்லூரிகளை தொடங்குவது தொடர்பான தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என  வலியுறுத்தியுள்ளார்.   புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்  இந்த அறிவிப்பினால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து விரிவான கடிதம்   எழுதியுள்ளார். 

மோடி


 இத்தகைய கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழகத்திற்கு  வருவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.  இது குறித்து  மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும் . அதற்கு  தேவையான அறிவுரைகளை ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு வழங்கிட வேண்டும் என முதல்வர் தமது கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web